கதைப்பாடல்
கதைப்பாடல்
- விவரங்கள்
- படிப்புகள்: 207
(கதை ஒன்றை பாடலாக பாடுகின்ற மரபிலமைந்த பாடல்கள் கதைப்பாடல்கள் எனப்படும்.)
ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டைவைத்தாய்
கல்லைப்பிளந்து கடலருகே
முட்டை வைத்தேன்
வைத்ததுவோ மூன்று முட்டை
பெரித்ததுவோ இரண்டு குஞ்சு
மூத்த குஞ்சுக்கிரை தேடி
மூனு மலை சுற்றி
வந்தேன்
இளைய குஞ்சுக்கிரை தேடி
ஏழு மலை சுற்றி வந்தேன்
மாயக் குறவன்
வழிமறித்துக் கண்ணி குற்ற
காலிரண்டும் பட்டுச்
சிறகிரண்டும் மாரடிக்க
நான் அழுத கண்ணீரும்
என் குஞ்சழுத கண்ணீரும்
வாய்க்கால் நிரம்பி
வழிப்போக்கர்
கால்கழுவ
இஞ்சிக்குப் பாய்ஞ்சி
இலாமிச்சை வேரூன்ற
நான் அழுத கண்ணீரும்
என் குஞ்சழுத கண்ணீரும்.


