சாந்தன்

யோகாசனம்

பச்சன் முத்திரை : சமிபாட்டு சம்பந்தமானது.

பாபா படம் மூலம் அனைவரும் அறிந்த முத்திரை (ஆனால் முத்திரை பிடிப்பதில் சிறு வேறுபாடு உண்டு) 

உணவு சமிபாடு அடைவதுடன் தொடர்புடையது.

முறை: நடு விரல், மோதிர விரலின் நுனிகள் கட்டை விரலின் நுனியுடன் இணைத்து மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல்.

நேர அளவு: நாளாந்தம் 45 நிமிடங்கள் எனக் கூறப்படுகிறது. எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அதற்கேற்ப பலன் கூடும். சாப்பிட்ட பின்னர் பயன்படுத்துவது உகந்தது.

பலன்: எமது உடலின் கழிவுத் தொகுதியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.

  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
  • மலச்சிக்கல், மூலவியாதி போக்கும்
  • கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது