நையாண்டிப் பாடல்

அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக


என்ன பிடிக்கிறாய் அந்தோனி
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
பொத்திப் பொத்திப் புடி அந்தோனி
பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே

கோண ஆகாண மலையேறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் குறைஞ்சதெண்டு
ஓலம் வைச்சான்வெள்ளைத் துரை

பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது


காக்கொத்தரிசாம்
கண்ணுழுத்த செத்த மீனாம்
போக்கற்ற மீரானுக்குப்
பொண்ணுமாகா வேணுமாம்.

கச்சான் அடிச்ச பின்பு
காட்டில் மரம் நின்றது போல்
உச்சியில நால மயிர்
ஓரமெல்லாம் தான் வழுக்கை.