நடவுப்பாட்டு
நடவுப்பாட்டு: 1
- விவரங்கள்
- படிப்புகள்: 184
தங்கரதம் நானிருக்க அம்மாடியோ
அந்த தட்டுக்கெட்ட அத்தபுள்ள அம்மாடியோ
தங்காளையும் மாலையிட்டான்
உருமத்தில் பூத்த பூவு
ஊசி மல்லி நானிருக்க
ஊசடிச்ச பூவுக்கேதான்
ஊரு ஊரா சுத்துரானே
காலையில பூத்த பூவு
கனகாம்பரம் நானிருக்க
கவுச்சடிச்ச பூவுக்கேதான்
அவன் காடு காடா சுத்துரானே.
நடவுப்பாட்டு: கடவுள் வாழ்த்து
- விவரங்கள்
- படிப்புகள்: 190
சந்திரரே சூரியரே
சாமி பகவானே
சந்திரரே நான் நினைச்சி
சாய்ச்சேன் திருஅலவு
சாய்ச்ச திரு அலவு
சமச்சி பறி ஏறனும்
எடுத்த திரு அலவு
எழுந்து பறி ஏறனும்
என்றவாறு கடவுளை வாழ்த்திப் பாடுவர்.


