ஆய்தக்குறுக்கம்

ஆய்தக்குறுக்கம்


ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும்.

ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.

 

ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
-
நன்னூல்

 

.கா.: முள் + தீது = முஃடீது

 

மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்.